விஜயகாந்த் இயக்கி நடிக்கும் விருதகிரி
எங்கள் ஆசானை அடுத்து விஜயகாந்த் புதிதாக நடிக்க இருக்கும் படம் விருதகிரி. இப்படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே. சுதீஷ் தயாரிக்க, விஜயகாந்தே இயக்க இருக்கிறார் என்பது கூடுதல் செய்தி. கதாநாயகியாக மும்பை நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார். விஜயகாந்திற்கு இதில் போலீஸ் அதிகாரி வேடம். ஒளிப்பதிவு: வேலுமணி. சண்டைக்காட்சிகளை ராக்கி ராஜேஷ் வடிவமைக்கிறார். தனது ரசிகர்கள் மட்டுமல்லாது, அனைத்துத் தரப்பினரையும் கவரும்படி மிகப்பிரமாண்டமாக படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் விஜயகாந்த்.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com