சிநேகா நடிக்கும் பவானி ஐ.பி.எஸ்
விஜயசாந்தி நடித்து வெளியாகி முன்பு பரபரப்பாகப் பேசப்பட்ட படம் வைஜெயந்தி ஐ.பி.எஸ். அதே படம் இப்போது ரீமேக் செய்யப்பட இருக்கிறது. விஜயசாந்தி நடித்த பாத்திரத்தில் நடிக்கிறார் சிநேகா. பிரபல இயக்குனர் கிச்சாவின் ஸ்ரீ மூவி மேக்கர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, பூபதி ஒளிப்பதிவு செய்கிறார். கன்னட நடிகர் தேவராஜ் வில்லனாக நடிக்க இருக்கிறார்.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com