விஸ்வமய - சி.டி. வெளியீடு
தலைசிறந்த கர்நாடக சங்கீத வாக்கேயக்காரர்களில் ஒருவரான ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றிய 19 ‘நோட்டுஸ்வர சாஹித்ய' பாடல்கள் 'விஸ்மய' சி.டியில் இடம்பெற்றுள்ளன. இவை மேற்கத்திய இசையின் அடிப்படையில் அமைந்தவை. மொத்தம் உருப்படி 39. இவற்றைப் பொதுவாகக் கச்சேரிகளில் யாரும் பாடுவதில்லை.

இந்த சி.டியைத் தயாரித்திருப்பவர் 'கன்னிக்ஸ்' கன்னிகேசுவரன். பாடல்களைச் செம்மையாகப் பாடியிருக்கிறார் குமாரி விதிதா. பின்னணியில் வாசித்திருக்கும் Harp, Penny Whistle போன்ற வெளிநாட்டு வாத்தியங்கள் பாடல்களுக்கு மேலும் மெருகூட்டுகின்றன.

'விஸ்மய' என்ற வடமொழிச் சொல்லுக்கு wonder அல்லது அதிசயம் என்று பொருள். சி.டி.யுடன் வரும் 20 பக்க புத்தகத்தில் சாஹித்யங்கள் மிக அழகாகப் பொருளுடன் எழுதப்பட்டுள்ளன.

மேலும் விபரங்களுக்கு: www.kanniks.com

டாக்டர். ப. நாராயணசாமி,
கனடா

© TamilOnline.com