பால் பேடா
தேவையான பொருட்கள்
வெண்ணெய் - 1/2 கிண்ணம்
பால் பவுடர் - 2 கிண்ணம்
இனிப்பூட்டிய
கண்டென்ஸ்ட் பால் - 1 1/3 கிண்ணம் (14 அவுன்ஸ் அதாவது 1 டப்பா)

செய்முறை
வெண்ணெயை ஒரு வாயகன்ற நுண்ணலை அடுப்பில் வைக்கக்கூடிய கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு நுண்ணலை அடுப்பில் வைத்து உருக்கவும். உருகிய பின்னர் வெளியில் எடுத்து அத்துடன் பால் பவுடர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு கண்டென்ஸ்ட் பாலையும் சேர்த்து நன்றாகக் கலந்து, மூடாமல் 3 நிமிடங்கள் நுண்ணலை அடுப்பில் வைக்கவும்.

ஒவ்வொரு நிமிடம் ஆன பிறகும் வெளியில் எடுத்து ஒரு மரக்கரண்டியால் நன்கு அரை நிமிடமாவது கலக்கவேண்டும். மூன்று நிமிடங்களில் இந்தக் கலவை கெட்டியாகி விடும். வெளியில் எடுத்து நன்றாகக் கலக்கி கை பொறுக்கும் சூடு வந்தவுடன் இவற்றை பேடா வடிவங்களில் செய்யவும். அதாவது உள்ளங்கையில் வைத்து உருண்டையாக்கிப் பின் சற்றுத் தட்டையாகச் செய்யவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com