குண்டு துளைக்காத ரயில் எஞ்சின்
இந்தியாவின் முதல் குண்டு துளைக்காத பயணிகள் ரயில் எஞ்சின், அசாமில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் எஞ்சின் முகப்புக் கண்ணாடி குண்டு துளைக்காதது. எஞ்சினின் வெளிப்பகுதி முழுவதும் குண்டு துளைக்காத தகடுகளால் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த மே மாதம் ரயில் ஓட்டுனர் ஒருவர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதை அடுத்து, லம்திங்-பதார்பூர்-சில்சார் பகுதிகளில் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. உயிருக்கு அஞ்சிய எஞ்சின் டிரைவர்கள் அப்பகுதிகளில் வண்டியை ஓட்ட மறுத்து விட்டனர். இந்தப் புதிய எஞ்சின் ஒரு தீர்வாக வருகிறது.

ஏற்கனவே குண்டு துளைக்காத சரக்கு ரயில்கள் இப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டு இயக்கப்பட்டு வருவதால், தற்போது பயணிகளும் நம்பிக்கையுடன் பயணம் செய்ய முன்வந்திருக்கின்றனர். இத்திட்டம் வரும்காலத்தில் நாடெங்கும் விரிவுபடுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அரவிந்த்

© TamilOnline.com