அமெரிக்காவில் விஜய்
விஜய் நடித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'குருவி' அமெரிக்காவிலும் தன் சிறகை உயரே விரித்துப் பறந்து கொண்டிருக்கிறது. இப்படத்தின் சிறப்புக் காட்சி கலிஃபோர்னியாவின் சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில், செஞ்சுரி சினிமாஸ் திரையரங்கில் மே 23, 2008 அன்று இரவு நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அரங்கம் நிறைந்து விட்டது. சிறப்புக் காட்சிக்காக 8:30 மணிக்கு வரவிருந்த விஜய், 7:30 மணிக்கே அரங்கத்துக்கு வந்து ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டும், கை குலுக்கிக் கொண்டும், சிரித்துப் பேசிக்கொண்டும் இருந்தார். ரசிகர்கள் ஒருவர் பின் ஒருவராக வரிசையில் வந்து புகைப்படங்கள் எடுத்துச் சென்றனர்.

விஜய் பேசும்போது, திரையரங்கில் தான் நேரடியாக ரசிகர்களைச் சந்திப்பது அதுவே முதன்முறை என்றும், இதைத் என்றும் மறக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். விழா மேடையில் விஜய் பாட்டுப்பாடி, நடனமாடியது மறக்க முடியாததாக இருந்தது.

அரவிந்த்

© TamilOnline.com