மோதி விளையாடு
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சரண் இயக்கும் புதிய படம் மோதி விளையாடு. 'உன்னாலே உன்னாலே' படப்புகழ் வினய் நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு இணையாக நடிப்பவர் இன்னமும் வெளிவராத பாரதிராஜாவின் பொம்மலாட்டத்தில் அறிமுகமான காஜல் அகர்வால். முழுக்க முழுக்கச் சென்னையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப்படம் கோலாலம்பூரில் சென்னை போன்று செட் போடப்பட்டு படமாக்கப்பட இருக்கிறது. கதை எஸ். ராமகிருஷ்ணன்; இசை: ஹரிஹரன் லெஸ்ஸி; ஒளிப்பதிவு: கருண்; இந்தப் படத்தை முற்றிலும் புதிய உத்தியில் உருவாக்க இருப்பதாகத் தெரிவிக்கிறார் இயக்குநர் சரண்.

அரவிந்த்

© TamilOnline.com