பேரரசுவின் திருவண்ணாமலை
கவிதாலயா தயாரிப்பில் டைரக்டர் பேரரசு, அர்ஜுனை வைத்துப் புதிதாக இயக்கிவரும் படம் திருவண்ணாமலை. இதில் அர்ஜுனுடன் இணைந்து நடிப்பவர் தான்யா சானியா. இவருக்கு பள்ளிக்கூட ஆசிரியை வேடம். அர்ஜுன் கேபிள் ஆபரேட்டர். படத்தின் பாடல்களையும் எழுதியிருக்கும் பேரரசு, 'இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகளும், படத்தில் இடம் பெறும் கிரிவலக் காட்சிகளும் மிகப் பரபரப்பாகப் பேசப்படும். இது அரசியல் மட்டுமல்ல; ஆன்மீகமும் இணைந்த கமர்ஷியல் படம்' என்கிறார். கும்பகோணம், பட்டீஸ்வரம், காரைக்குடி, ஹைதராபாத் என பல இடங்களில் எடுக்கப்பட இருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. படத்தில் சாய்குமார், கருணாஸ், வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை: ஸ்ரீகாந்த் தேவா.

அரவிந்த்

© TamilOnline.com