100 கோடி ரூபாயில் மர்மயோகி!
தசாவாதரத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமல் நடிக்க இருக்கும் படம் மர்மயோகி. கி.பி. 6ம் நூற்றாண்டில் நடந்த சம்பவங்களை வைத்து பெரும் பட்ஜெட்டில் இத்திரைப்படம் உருவாகிறது. பிரமிட் சாய்மீரா நிறுவனம் இத்திரைப்படத்தை 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்க இருக்கிறது. கதை, திரைக்கதை எழுதித் தானே இயக்க இருக்கிறார் கமல்ஹாசன். படத்தில் கமலுக்கு இணையாக ஹேமமாலினி, கஜோல் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான். அமிதாப்பச்சனும் இதில் நடிக்க இருக்கிறார் என்பது கொசுறுச் செய்தி.

அரவிந்த்

© TamilOnline.com