தமிழில் பரதநாட்டியப் பாடல்கள்
பரதநாட்டியத்தில் நிறையத் தமிழ்ப் பாடல்கள் பாடப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு கவிகுஞ்சர பாரதி, மாரிமுத்தா பிள்ளை, முத்துத் தாண்டவர், சுப்பராமையர் தவிர மௌனகுரு ருத்ரமூர்த்தி என்பவர் எழுதிய 'பழனி ஆண்டவர் ஆனந்த ஜாவளி' போன்ற பல பழைய நூல்களிலிருந்து திரட்டி 'தமிழில் பரதநாட்டியப் பாடல்கள்' என்ற நூலைக் கவிஞர் கிருஷாங்கினி வெளியிட்டுள்ளார். நாட்டியம் பிறந்த கதை, நாட்டிய சாஸ்திரம், முத்திரைகள், நடனத்தில் உடல் என்னும் கருவி (படங்களுடன்), அபிநயம், அரங்க வடிவம் மற்றும் அமைப்பு, நாட்டியம் அன்று, நடனம் இன்றைய நிலை, பதம், ஜாவளி, கீர்த்தனை என்ற தலைப்புகளில் பாடல் தொகுப்புக்குமுன் இவர் கொடுத்திருக்கும் அறிமுகவுரைகள் நாட்டியம் கற்பவருக்கும் கற்பிப்பவருக்கும் மிகவும் பயனுள்ளவை. ஒவ்வொரு பாடலுக்கும் ராகம், தாளம், ஆக்கியோர் பெயர் கொடுத்ததோடு நில்லாமல், பாடல் வர்ணிக்கும் சூழல், ரசம் ஆகியவற்றையும் கொடுத்து, நடனமாடுவோருக்குப் பயன்படுவதற்கான முழு முயற்சியைச் செய்துள்ளது குறிப்பிடத் தக்கது.

('தமிழில் பரதநாட்டியப் பாடல்கள்'; தொகுப்பாசிரியர்: கிருஷாங்கினி; சதுரம் பதிப்பகம், சென்னை 600047; இணையம் வழி வாங்க: www.anyindian.com)

© TamilOnline.com