மாணவன் நினைத்தால்
ரித்திக் என்பவர் புதுமுகமாக அறிமுகமாகும் படம் மாணவன் நினைத்தால். மாணவன் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும், அவர்களால் இந்த நாட்டை உயர்த்த முடியும் என்பதைக் கூறப் போகும் இந்தப்படத்தை இயக்குகிறார் ஞானமொழி. கதாநாயகியாக ஆதிரா என்பவர் அறிமுகமாகிறார். மிக முக்கியமான வேடத்தில் பாக்யராஜ் நடிக்கிறார். இசை தஷி. இவர் கேரள அரசின் சிறந்த இசை அமைப்பாளருக்கான விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவமாம்.

அரவிந்த்

© TamilOnline.com