ஒரே ஒருவரின் கடைசி நிமிடம்
திரைப்பட வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே ஒருவர் நடிக்கும் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. 'கடைசி நிமிடம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஸ்ரீ த்ரிலோக் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்து வருகிறது. ஸ்ரீதர் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இயக்குபவர் சின்னா. கொல்லிமலை, கல்வராயன் மலைத்தோட்டம், பொதிகை மலை, கேரளத்திலுள்ள காட்டுப்பகுதிகள் ஆகியவற்றில் படப்படிப்பு நடந்து முடிந்துள்ளது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 'விமான விபத்தில் காட்டுக்குள் சிக்கிக் கொள்ளும் ஒருவருக்கு ஏற்படும் திகிலான அனுபவங்கள் தான் இந்தப் படம்' என்கிறார் சின்னா. தமிழ் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரப் போகிறது இத்திரைப்படம். வசனம் வித்யாசாகர், இசை மணிசர்மா, தயாரிப்பு பரணி.

அரவிந்த்

© TamilOnline.com