ரவை சொஜ்ஜி அப்பம்
தேவையான பொருட்கள்
ரவை - 1 கிண்ணம்
வெல்லம் - 3/4 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 4
பால்மாவு - 1 தேக்கரண்டி
மைதா மாவு - 1 கிண்ணம்
மஞ்சள்பொடி (அ)
கேசரித் தூள் - சிறிது
எண்ணெய் - பொரிக்க
நெய் - 1 தேக்கரண்டி

செய்முறை
ரவையை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். அடுப்பில் வெல்லத்தைக் கரைய விட்டு தேங்காய்த் துருவல், ஏலக்காய்ப் பொடி போட்டு ஒரு கொதி வந்தவுடன் ரவையைக் கொட்டிக் கிளறி அரை வேக்காட்டில் எடுக்கவும். நெய், பால்பொடி போட்டுப் பிசைந்து பூரணம் செய்து கொள்ளவும்.

மைதாமாவை மஞ்சள் தூள் போட்டுச் சிறிது எண்ணெய் விட்டுப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். மாவில் சிறிது எடுத்து உள்ளங்கையளவுக்குத் தட்டிக்கொள்ளவும். அதில் சிறு உருண்டை பூரணத்தை நடுவில் வைத்து மூடி எண்ணெய் தொட்டுக் கொண்டு தட்டவும். எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

தோசைக்கல்லில் போட்டும் எடுக்கலாம். இது மிகவும் சுவையான அப்பம்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com