CRY நடை- 2008
Child Relief and You (CRY) என்பது அமெரிக்காவில் 501C3ன் கீழ் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனம். சிறாரின் வாழ்க்கை வறுமையாலும் பிற வாழ்க்கைத் துயரங்களாலும் சோகம் நிரம்பியதாகிவிடுகிறது. அத்தகைய வறுமைக் கோட்டுகுக் கீழே வாழும் இந்தியக் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு வழி செய்கிறது CRY நிறுவனம். ஆண்டுதோறும் CRY Walk என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தனது திட்டங்களுக்காகப் பணம் திரட்டுகிறது.

இந்த ஆண்டு ஜூன் 15 அன்று காலை 8 மணிக்கு 10/5 கி.மீ ஓட்டமும், 5 கி.மீ. நடையும் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். இவை ஷோர்லைன் பார்க், மௌன்டன் வியூ, கலிபோர்னியாவிலிருந்து தொடங்கும். பங்கு கொள்வோரை உற்சாகப்படுத்த, இந்திய உணவு, பழரசங்கள், பலகாரங்கள் ஆகியவை அளிக்கப்பட உள்ளன. மேலும் ஜூன் 1ம் தேதிக்குள் பதிவு செய்பவர்களுக்கு 8 GB ஐபாட் பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றமும், மற்றும் பல வளைகுடாப் பகுதி சேவைச் சங்களும் இதில் பங்கேற்கின்றன. தன்னார்வப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு உதவிகள் செய்கிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு: http://community.america.cry.org

பாகீரதி சேஷப்பன்

© TamilOnline.com