அடுத்த வாரிசு
முதல்வர் மு.கருணாநிதியின் அரசியல் வாரிசுகளாக ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் களத்தில் உள்ளனர். மூத்த மகன் மு.க.முத்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குநர் பவித்ரன் படத்தில் மீண்டும் பாட வந்தது பழைய செய்தி.தற்போது மு.க.முத்துவின் மகன் அறிவுநிதி சினிமாவில் அப்பாவின் வாரிசாகக் களம் இறங்கியுள்ளார். முதன்முதலாகப் 'பெருமாள்' படத்துக்காக அறிவுநிதி பாடியிருக்கிறார். அப்பாடல் நன்றாக வந்திருப்பதாக அதற்கு இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவா பார்ப்பவர்களிடம் எல்லாம் சிலாகித்துக் கூறி வருகிறார்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com