அய்யன்
வர்ஷா பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் 'அய்யன்'. இதில் 'மாமதுரை'யில் நடித்த வாசன்கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதிப் படத்தை இயக்குபவர் மகேந்திரன் முனியசாமி. இவர் 'தினந்தோறும்' நாகராஜ், பார்கவன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். 'கிராமத்து அழகையும் அங்கு வறுமையில் உழலும் மனிதர்களின் அவலத்தையும் ஆக்‌ஷன் பின்னணியில் கூறுகிறோம். இதுவரை வெளிவந்த கிராமத்துக் கதைகளிலிருந்து அய்யன் முற்றிலும் மாறுபட்டு இருக்கும்' என்கிறார் முனியசாமி. இசை இளையராஜா. ஒளிப்பதிவு காசி வி.நாதன். கலை என்.கே.பாலா. படத்தொகுப்பு சாய்சுரேஷ்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com