தமிழில் சோல்ஜர்
இந்தியில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டிய 'சோல்ஜர்' தற்போது தமிழில் தயாரிக்கப்படவிருக்கிறது. விஜய் இதில் நாயகனாக நடிக்கவிருக்கிறார். புகழ்பெற்ற ஐங்கரன் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கவிருக்கிறது. இயக்கம் பிரபுதேவா. இவர் ஏற்கனவே விஜயின் 'போக்கிரி' படத்தை இயக்கியுள்ளார். நாயகியாக நடிக்க நயன்தாரா தேர்வு செய்யப்பட்டுள்ளது சிறப்புச் செய்தி.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com