கணிதப் புதிர்கள்
1. ஒரு குடும்பத்தினரின் மொத்த எடை 170 கிலோ. தந்தையின் எடை இரு மகன்களின் சராசரி எடையை விட 100 கிலோ அதிகம். இரண்டாவது மகனின் எடை முதல் மகனது எடையை விட 60% குறைவு என்றால் மூவரது தனித்தனியான எடை எவ்வளவு?

2. ABCD என்ற பக்கங்களைக் கொண்ட உள்ள ஒரு சதுரவடிவக் கட்டிடத்தின் ஒவ்வொரு பக்கத்துக்கும் 27 தூண்கள் தேவைப்பட்டால் மொத்தம் அதற்கு எத்தனை தூண்கள் தேவைப்படும்

3. ஒரு எண்ணை 2, 3, 4, 5, 6 ஆகியவற்றால் வகுக்க மீதி 1 வருகிறது. அதே எண்ணை 7-ஆல் வகுக்க மீதி பூஜ்யம் வருகிறது. அந்த எண் எது? அதைப் போன்ற தன்மை கொண்ட பிற எண்கள் யாவை?

4. ஒரு தந்தையின் வயது மகனின் வயதை விட நான்கு மடங்கு அதிகம். முப்பது வருடங்களுக்குப் பிறகு தந்தையின் வயது மகனின் வயதைப்போல இரு மடங்கு இருக்கும் என்றால் தற்போது தந்தையின் வயது என்ன, மகனின் வயது என்ன?

5. ராமுவிடம் ஐந்து லிட்டர் கொள்ளவுப் பாத்திரமும் 4 லிட்டர் கொள்ளவுப் பாத்திரமும் இருந்தது. அவன் அதிலிருந்து சரியாக 2 லிட்டர் தண்ணீரை அளந்து ஊற்ற வேண்டும். எப்படி ஊற்றியிருப்பான்?

அரவிந்தன்

விடைகள்

© TamilOnline.com