சித்திரை கொண்டாட்டம் : வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்
ஏப்ரல் 20, 2008 அன்று சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி 'சித்திரை கொண்டாட்டம் 2008' லாஸ் அல்டோஸ் பூட்ஹில் கல்லூரி அரங்கத்தில் கொண்டாடப் பட்டது.

தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் முதலாவதாக 'லலித கான வித்யாலயா' மாணவர்கள் பக்திப் பாடல் களையும், தேசபக்திப் பாடல்களையும் வழங்கினார்கள். மாணவர்கள் ஓரே நிறத்தில் உடையணிந்து ஒரே குரலில் சேர்ந்து பாடியது விருந்தாக அமைந்தது. 'அழகு தெய்வமாக வந்து' என்கிற காவடிச்சிந்துவும், 'வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்' என்கிற வள்ளளார் பாடலும் கைதட்டலை அள்ளிச் சென்றன. பக்கம் வாசித்த பாலாஜி மஹாதேவனும், நாகராஜ் மாண்டியாவும் சிறப்பாகச் செய்தனர். இசை அமைத்த லதா ஸ்ரீராம் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார்.

நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதியாக பெர்க்கலி பல்கலைகழகத் தமிழ்ப் பீடத்தின் பத்தாண்டு நிறைவு விழா கொண்டாடப் பட்டது. இதைப் பற்றிய விவரங்கள் வேறொரு செய்திக் குறிப்பாக வெளியாகியுள்ளது.

மூன்றாவதாக சுதா முரளியின் 'ரிதம்ஸ்' குழுவினா¢ன் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடனமாடிய அனைவருமே 12 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது இதன் சிறப்பு. தெர்ந்தெடுத்த பாடல்களுக்கு இவர்கள் மிகச் சிறப்பாக ஆடிக் கைதட்டலை அள்ளிச் சென்றனர்.

நான்காவதாக 'ஒஜாஸ் மந்த்ரா' குழுவினா¢ன் நாட்டுப்புற, திரையிசைப் பாடல்களுக்கான நடன நிகழ்ச்சியைக் குழுவின் உறுப்பினர் களே நகைச்சுவையோடு தொகுத்து வழங்கினர். இக்குழுவினா¢ன் நடனக் காட்சி அமைப்புகளும், புதுமையான நடனமும் பார்ப்பவர்களை மிகவும் ஈர்த்தது. நிறுவனர் வைதேகி, ஜோதி மற்றும் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைத்துக் கலைனஞர்களுக்கும் நல்ல எதிர்காலம் உண்டு.

நிறைவாக 'சஹானா' குழுவினா¢ன் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பலகுரலில் பேசிய அருண், நடிகர் ரஜினிகாந்தைப் போலப் பேசி அசத்தினார். பாடல்களின்போது பிண்ணணியில் அப்பாடலின் ஒளிக்காட்சியும் காட்டப்பட்டது சிறப்பாக அமைந்தது. இதில் பாடிய சுப்பு, மீரா, துர்கா, கிஷ்மு மற்றும் பலரும் சிறப்பாக செய்தனர். இசைக்கருவிகளை இசைத்த அருண், அஸ்வின் பாலாஜி மற்றும் பலரும் தங்கள் பங்கைச் சிறப்பாக ஆற்றினர்.

இறுதியாகச் செயலாளர் மகேஷ் சீனிவாசன் நன்றியுரை வழங்கினார்.

காவேரி கணேஷ்

© TamilOnline.com