சுவாமி சுகபோதானந்தாவின் வெற்றியின் படிகள் - செயல் பட்டறை
சுவாமி சுகபோதானந்தா அவர்கள் வடிவமைத்த 'வெற்றியின் படிகள்' செயல் பட்டறை சன்னிவேலில் உள்ள கோமளா விலாஸில் மே 17, 2008 அன்று மாலை 6:15 முதல் 9 மணிவரை நடைபெறும். சுவாமி சுகபோதானந்தா அவர்களிடம் தீவிரப் பயிற்சி பெற்ற மாணவர்கள் இதை நடத்துகின்றனர்.

இது வாழ்க்கையை முழுமையாக வாழும் கண்ணோட்டத்தோடு வாழ்க்கையைப் பார்க்க நம்மை ஆயத்தப்படுத்தும் பயிற்சிக் கூடம். ஜப்பானிய கைசான் கொள்கைப்படி, இன்று புதிதாகப் பிறக்கும் இந்த நாள் நமக்கு நேற்றைவிட அதிக மகிழ்ச்சியையும் அன்பையும் நம்பிக்கையையும் கொடுத்து வாழ்க்கையில் சரியான ஏணிப்படியில் மேலேறிச் செல்லும் வழிமுறைகளைப் பற்றிச் சிந்திக்க வைக்கிறது. பல தொடக்க நிலை தியானங்களையும், மூச்சுப் பயிற்சிகளையும் இதில் கற்பிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி பல எளிய ஆனால் மிக ஆழமான உத்திகளைக் கற்பித்து, இங்கு நாம் பெற்ற மனத்தெளிவை மேன்மேலும் எப்படி வளர்த்துக் கொள்வது என்பதையும் தெளிவாக்குகிறது.

இது சுவாமி சுகபோதானந்தா அவர்களின் பிற பயிற்சிகளைப் போலவே வாழ்க்கையில் உற்சாகத்தையும், ஆழத்தையும் ஒரே நேரத்தில் தந்து விடுகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த ஜனவரி, மார்ச் மாதங்களில் சன்னிவேல், சான் ஹொஸே பகுதிகளில் சிறப்பாக நடைபெற்றது.

பயிற்சிக்குக் கட்டணம் கிடையாது. பிரசன்னா டிரஸ்டுக்கு நன்கொடைகள் ஏற்கப்படும்.

இடம்: கோமள விலாஸ்,
1020 E Elcamino Real,
Sunnyvale, CA94087
நேரம்: May 17, saturday
6:15pm to 9:00pm

மேலும் தகவலுக்கு:
தொடர்புகொள்ள:
ஷகிலா - 408.425.2851
toshakila@gmail.com,
கமலா - 408.205.7035
vskamala@yahoo.com

N. ஷகிலா பானு

© TamilOnline.com