சத்குரு ஜக்கி வாசுதேவ் அமெரிக்கா வருகை
2008 மே, ஜூன் மாதங்களில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி, லாஸ் ஏஞ்சலஸ், அட்லாண்டா, வாஷிங்டன் பகுதிகளுக்கு வருகை தர இருக்கிறார். அந்தச் சமயம் தமது புதிய புத்தகம் ஒன்றை வெளியிடுவதோடு, ஆன்மிகம், யோகம் குறித்த சொற்பொழிவுகள் ஆற்றுவார். பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில்களும் அளிக்க உள்ளார்.

சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் தன்னை உணர்ந்த ஞானி. ஈஷாவை ஆதாரமாகக் கொண்டு ஞானோதயமடைந்த சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் குருவாகவும் உற்ற நண்பராகவும் திகழ்கிறார். இவரது தரிசனம் பதற்றம், சஞ்சலம், இறுக்கம் நிறைந்த உணர்ச்சிவசப்படும் கோழை மனங்களைக் கூட அன்பான, அமைதியான, ஆனந்தமான மனநிலைக்கு எடுத்துச் செல்கிறது.

ஈஷா அறக்கட்டளை அனைத்துத் தரப்பு மக்களின் நல்வாழ்வு, மன அமைதி மற்றும் ஆன்மீக மேம்பாட்டுக்காகத் தொண்டாற்றுகிற, பதிவுபெற்ற பொதுநல அமைப்பாகும். ஒரே கூரையின்கீழ் அனைத்து யோகப் பயிற்சி களையும் வழங்கும் சக்தி மிக்க ஸ்தானமாக உருவாக்கப்பட்டது ஈஷா யோக மையம்.

உடல், மனம், ஆன்மீகம் சார்ந்த ஆசனங்கள், கிரியை, பிராணாயாமம் எனப் பலவகைப் பயிற்சிகளையும் அனுபவ பூர்வமான முறையில் மையம் வழங்குகிறது. கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம், ராஜ யோகம் என அவரவர் விருப்பத்துக் கேற்ப மனிதன் புதிய பரிமாணத்தில் மலர்வதற்கான சூழ்நிலைகளை இம்மையம் வழங்குகிறது.

ஆன்மீக வாழ்க்கை என்பது உலகியல் சார்ந்த சமுதாயப் பொறுப்புகளுக்கும், குடும்பப் பொறுப்புகளுக்கும் எதிரானதல்ல என்பதைப் பயிற்சிபெறும் அன்பர்கள் உணர்ந்து கொள்கின்றனர். அந்தப் பொறுப்புகளையே வழிமுறையாகக் கெதண்டு வாழ்க்கையை முழுமையாக வாழ்வதுடன் தங்களுக்குள் புதைந்திருக்கும் ஆற்றலை ஆனந்தமாய் வெளிப்படுத்திச் சீரமைத்துக் கொள்கின்றனர்.

சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின்:

வருகை நாட்கள்:
வாஷிங்டன் டி.சி. - மே 7
அட்லாண்டா - மே 21
சான்பிரான்சிஸ்கோ
விரிகுடாப் பகுதி - மே 30
லாஸ் ஏஞ்சலஸ் - ஜூன் 4

இந்த ஆற்றல் மிக்க ஈஷா யோகத்தின் மூலம் பேரானந்தம் பெற்று இனிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள, இனம், மதம், மொழி, தொழில், வயது என ஏதும் தடையில்லை.

மேலும் விபரங்களுக்கு:
1 866 424 ISHA
http://www.ishafoundation.org
ஈஷா மையத்தின் யோக வகுப்புகள் நடைபெறும் விவரங்கள்:
லாஸ் ஏஞ்சலஸ்: ஜூன் 11-17; ஜூன் 25-ஜூலை 1; தொலைபேசி: 714.651.8611.
சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி: ஜூன் 18-24; தொலைபேசி: 408.717.0047.

© TamilOnline.com