வெண்ணிலா கபடிகுழு
இமேஜ் கிரியேஷன்ஸ் நிறுவனம் 'வெண்ணிலா கபடிகுழு' என்றொரு படத்தை தயாரிக்கவிருக்கிறது. கே. ஆனந்த் சக்ரவர்த்தி இப்படத்தைத் தயாரிக்கிறார். படத்தின் துவக்கவிழா சென்னை ஏவிஎம் பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது. 'கபடிக்குழு' என்றல்லவா இருக்க வேண்டும் என்று யாராவது சொன்னால் அவரைத் 'தமிழ் வாத்தியார்' என்று கேலி செய்வார்கள். 'அரண்மனை கிளி' போன்ற ஒற்றுவிட்ட அண்ணாக்கள் முன்னரே வந்துள்ளனரே. எப்படியும் தமிழில் படப்பெயர் வைத்ததற்காக வரிச்சலுகை கிடைத்துவிடும்.

அரவிந்த்

-

© TamilOnline.com