மாதுளம்பழ ரசம்
தேவையான பொருட்கள்
மாதுளம்பழச் சாறு - 1/2 கிண்ணம்
துவரம்பருப்பு
(வெந்தது) - 1/4 கிண்ணம்
ரசப்பொடி - 1 தேக்கரண்டி
புளித் தண்ணீர் - 1 கிண்ணம்
கொத்துமல்லித் தழை
(நறுக்கியது) - சிறிதளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
நெய் - 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயம் - 1 சிட்டிகை

செய்முறை

ஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீர் விட்டு, உப்பு, பெருங்காயம், ரசப்பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். பொடி வாசனை போன பின்பு வெந்த துவரம்பருப்பைத் தேவையான தண்ணீரில் நன்கு கரைத்துச் சேர்க்கவும்.

இது நன்கு நுரைத்துப் பொங்கி வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி மாதுளம்பழச் சாறை விட்டுக் கலந்து கொத்துமல்லி தூவி விடவும். கடுகு பெருங்காயம், பச்சைமிளகாயை நெய்யில் தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.

மாதுளம்பழச் சாறை விட்ட பின்னர் கொதிக்கவிடக் கூடாது.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com