அமெரிக்க முதல் தமிழ் நாடக விழா
அமெரிக்க ஐக்கிய மாநிலங்களின் (USA) பல்வேறு நகரங்களில் தமிழ் நாடகங்கள் நடத்தி வரும் நாடகக் குழுக்கள் சில சேர்ந்து மே மாதம் நியூஜெர்ஸி, அமெரிக்காவில் முதல் தமிழ் நாடக விழாவை நடத்தவுள்ளன.

இவ்விழாவில் நான்கு நாடகங்களை மேடையேற்ற உள்ளார்கள். சென்ற இதழில், அவற்றில் முதலிரு நாடகங்கள், அவற்றை மேடையேற்றும் குழுக்கள் பற்றிய விவரங்களைக் கண்டோம். மற்ற இரு நாடகங்களைப்பற்றி இங்கே...

க்ரியாவின் (krea) இரு லைவ்ஸ் ஒரு ஸ்டோரி

தரமான தமிழ், ஆங்கில நாடகங்களை 'க்ரியா' மேடையேற்றி வருகிறது. சிந்திக்கத் தூண்டும் விஷயங்களைக் கருவாகக் கொண்ட நாடகங்களைச் சிறப்பான மேடை அமைப்புக்களுடன் சேர்த்து அளிப்பதுக்ரியாவின் சிறப்பு. 2001-ஆம் வருடம் தீபா ராமானுஜம், டார் ராமானுஜம், நவீன் நாதன்மற்றும் சில கலைஞர்கள் சேர்ந்து தொடங்கியரியா, 'பாதாம் அல்வா பழைய சோறாகிறது' (2001), 'தனிமை' (2003), 'மாயா' (2004), 'ஸ்ருதி பேதம்' (2005), 'கலக்கற சந்துரு-பிரமாதம்!'2005, டிவி புகழ் வரதராஜன் குழுவுடன் சேர்ந்து), 'கடவுளின் கண்கள்' (2006), 'Seeds and Flowers' (2007), 'Rabbit Hole' (2008), 'Let's Talk' (2008) ஆகியவற்றை வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் பல்வேறிடங்களில் நாடகங்ளை நடத்துவதில் க்ரியா குழு தனிப்பெயர்.அமெரிக்காவின் பல நகரங்கள், கனடா,இந்தியாவில் சென்னை, பெங்களூரு, மும்பைபோன்ற பல இடங்களிலும் க்ரியா நாடகங்களை மேடையேற்றியுள்ளது. பிரபலதிரைப்பட இயக்குனர் கே. பாலச்சந்தர்சென்னையில் 'ஸ்ருதி பேதம்' நாடகத்தைப்பாராட்டி விமர்சித்துள்ளார். க்ரியா குழுநடத்தும் ஒவ்வொரு நாடகத்தையும், உதவும்கரங்கள், அடையாறு கேன்ஸர் நிலையம்போன்ற எதாவதொரு சமூக சேவைஅமைப்புக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியாகநடத்தி வருகிறது.

நியூஜெர்ஸியில் மே மாதம் நடக்கவிருக்கும் முதல் அமெரிக்கத் தமிழ் நாடக விழாவில்க்ரியா, டார் (Tar) ராமானுஜம் எழுதிய 'இருலைவ்ஸ் ஒரு ஸ்டோரி' என்ற நாடகத்தை தீபாராமானுஜத்தின் இயக்கத்தில் மேடையேற்ற உள்ளனர்.

இந்நாடகம் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபுகுந்த இரு ஜோடிகளைப்பற்றியது. கணவனின் மகத்தான வெற்றியினால் வந்த விளைவுகளால் ஒரு குடும்பம்அல்லாடுகிறது. இன்னொரு ஜோடியோகணவனின் தொழில்முறைத் தோல்விகளைச்சமாளிக்கத் திணறுகிறது. நான்கு பேரும்வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சந்திக்கும்போது என்ன நடக்கிறது, இரு குடும்பத் தலைவிகளும் தம் வாழ்வில் எழுகின்ற சோதனைகளைச் சமாளித்து எவ்வாறு தத்தம் தனிப்பட்ட கனவுகளை நனவாக்கிக் கொள்கிறார்கள், அக்குடும்பங்கள் இறுதியில் எந்தத்திக்கில் செல்கின்றன என்பதே கதை.கதாநாயகர்கள் இருவரும் இறுதியில் சந்தித்துகொள்ளும்போது, 'வெற்றி என்று ஒருவர்நினைத்ததும், தோல்வி என்று மற்றவர் நினைத்ததும் இருவரையும் ஒரே நிலைக்குக் கொண்டு வந்து விட்டது, இதில் எது சரி?' என்று ஒரு பாத்திரத்தின் வாயிலாக நாடக ஆசிரியர் எழுப்பும் கேள்வி ஆழமான முத்தாய்ப்பு. அமெரிக்காவில் உள்ள இந்தியர் பெரும்பாலோர் குடியேறியவர்கள் என்பதால், தங்களின் சொந்த வாழ்வுகளின் எதிரொலியை இந்நாடகத்தில் காணலாம்.

'அவதார்ஸ்' வழங்கும் நினைத்தாலே நடக்கும்

'அரிதாரம் பூசிய அவதாரம்' என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் அவதார்ஸ் குழுவினர், வளைகுடா மேடைகளுக்குப் புதிதானவர்கள் அல்ல. மணி ராமின் 'காசு மேல காசு', 'ரகசிய சிநேகிதியே' நாடகங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. முழுநேர வேலைகளில் இருக்கும் இக்குழுவினர் வார இறுதிகளில் கூடி நாடகக் கலைஞர்களாக அவதாரம் எடுத்துக் கொள்வதாலும், மேடைகளில் ஒவ்வொரு நாடகமும் அந்த நாடகத்தின் கதாபாத்திரங்களும் புதிய அவதாரங்களை எடுப்பதாலும், தங்கள் குழுவை அவதார்ஸ் (Avatars) என்று அழைக்கிறார்கள்.

(இந்தத் தென்றல் இதழின் நிகழ்வுகள் பகுதியில் சுந்தரேஷ் எழுதியுள்ள 'அவதார்ஸ்' குழுவினரின் 'நினைத்தாலே நடக்கும்' இந்த நாடகத்தின் கதைச் சுருக்கதைத் தருவதோடு முழுமையாக விமர்சிக்கிறது.)

விழா நிர்வாகிகளும் பங்கேற்கும் குழுக்களும், விழா நாடகங்களில் மேடையமைப்பு மிகச் சிறப்பாக அமையப் பாடுபட்டு வருகிறார்கள். தயாரிப்புக்கும், குழுவினரின் பயணத்துக்கும் மிக அதிகச் செலவாகிறது என்பதால், நன்கொடைகள் மிக உதவியாக இருக்கும்.

முதல் அமெரிக்கத் தமிழ் நாடக விழா நிர்வாகக் குழு, வருங்கால நாடக விழாக்களில் பங்கேற்க விழையும் குழுக்களையும், நன்கொடைகளையும், தொண்டர்களையும் வரவேற்கிறது. நாடக விழாக்களில் பங்கேற்கவும், குழுக்களுக்கு நன்கொடை அளிக்கவும், விழா நடத்தப் பணி புரியவும் விரும்புவோர் தொடர்பு கொள்ள...

http://www.kreacreations.com;
மின்னஞ்சல்: dramanujam@yahoo.com

www.theavatars.org;
மின்னஞ்சல்: info@theavatars.org

http://www.stagefriendsusa.com;
மின்னஞ்சல்: thers@verizon.net

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com