விரிகுடாப் பகுதியில் சுவையான படம் One Way Ticket
சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் படமாக்கப்பட்ட 'ஒன் வே டிக்கட்' சான் ஹோசேயின் IMC6 அரங்கில் மார்ச் மாதம் திரையிடப்பட்டது.

அருண், கிரிஸ், ஏபி ஆகிய மூவரைச் சுற்றி நடக்கும் ஒரு சுவையான கதையைக் கொண்டது இந்தப் படம். தென்னிந்தியர் அருண், அவரது மனைவி டாக்டர் லக்ஷ்மி. இவர்களுக்கிடையேயான உறவு, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் இவற்றை விவரிக்கும் இந்தப் படம் ஒரு எதிர்பாராத முடிவையும் கொண்டது. கிரிஸ் ஒரு கலாட்டா இளைஞன். ஏபியோ சட்டத்துக்குப் புறம்பாக வந்தேறிய போதை மருந்து கடத்தும் ஆசாமி. சுவையான சம்பவங்களுக்குக் கேட்க வேண்டுமா?

ஜெய் ஷங்கர், ஷீல் குப்தா, சுப்பு கிருஷ்ணமூர்த்தி, சுஹைல் தயேப், மார்க் அலெக்ஸாண்டர், ஜென் கோட்ஸன் ஆகியோர் நடித்த இந்தப் படத்தை சீஜே மீடியா தயாரித்திருந்தது. இசை ஜெய் ஷங்கர், இயக்கம் சீனு கிருஷ்ணன். ஒரு சிறிய முன்னோட்டத்தைப் பார்க்க: www.onewayticketthemovie.com


தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்

-

© TamilOnline.com