படமாகிறது பசும்பொன் தேவர் வரலாறு
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் வரலாறு படமாகவிருக்கிறது. விளம்பரத் துறையில் பல ஆண்டு அனுபவம் பெற்ற இ.பா. கார்த்திகேயனின் 'பாப்பிலான் கம்யூனிகேஷன்' நிறுவனத்தின் முயற்சியில் உருவாகும் இப்படத்தைத் தயாரித்து அளித்திருக்கிறார் கா. கலைச்செல்வி.

தினத்தந்தி, தினமலர், தினகரன் போன்ற பல்வேறு முன்னணி நாளிதழ்கிளிலும், பல்வேறு வார இதழ்களிலும் பணியாற்றிய மா.ப. ஆபிரகாம் லிங்கன் பல்வேறு ஆதாரங்களை ஆய்வு செய்து தொகுத்து வழங்கியிருப்பதோடு, படத்தை இயக்கவும் செய்கிறார். பசும்பொன் தேவர் விடுதலைப் போர் காலத்தில் ஆற்றிய மாபெரும் பணிகளைச் சித்திரிக்கும் பல்வேறு காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருக்கின்றன். தேவரின் இளவயது வீடியோ ஆதாரங்கள் இல்லாததால், புகைப்படங்களைக் கொண்டு, மிகப் பெரிய பொருட்செலவில் அனிமேஷன் மற்றும் 3D கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ளனார்.

75 நிமிடம் ஓடும் இப்படத்திற்கு, பாடல்களை கவிஞர் யுகபாரதி இயற்ற, விஜய் ஆண்டனி இசையமத்திருகிறார். நடிகர் வாகை சந்திரசேகர் பின்னணிக் குரல் தந்துள்ளார்.

தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்

-

© TamilOnline.com