டி. ராஜேந்தரின் 'ஒருதலைக் காதல்'
'ஓருதலை ராகம்' படத்தின்மூலம் திரையுலகில் நுழைந்து, பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் விஜய.டி. ராஜேந்தர். அவர் இயக்க இருக்கும் புதிய படம் 'ஒருதலைக் காதல்'. லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும், சிம்பு சினி ஆர்ட்ஸ¥ம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ராஜேந்தர் கதாநாயகன். இரண்டு புதுமுகங்கள் கதாநாயகிகளாக அறிமுகம்.

முதல்முறையாக செயற்கையாக எந்த 'செட்'டும் போடாமல், முழுவதும் கிராமத்துப் பின்னணியில் படத்தை எடுக்கப் போவதாகக் கூறியிருக்கிறார் ராஜேந்தர். குறுகிய காலத் தயாரிப்பான இந்தப் படம் மிகப் பெரும் வெற்றி பெறுமாம். படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, இயக்கம் எல்லாமே, வேறு யார், ராஜேந்தர் தான். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்

-

© TamilOnline.com