ரகுவரன் மரணம்
'பூவிழி வாசலிலே' மூலம் திரைப்பட வுலகில் வித்தியாசமான வில்லனாக அறியப் பட்ட ரகுவரன் சில மாதங்களாகவே நோய் வாய்ப்பட்டிருந்தார். மார்ச் 19, 2008 அன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

ரகுவரன் 'ஏழாவது மனிதன்' (1982) மூலம் திரையுல கில் காலடி வைத்தார். மிஸ்டர் பாரத், அஞ்சலி, முதல்வன் உட்படப் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதைக் கவர்ந்தார். இவரது கடைசிப் படம் 'சில நேரங்களில்'. மலையாளம், இந்தி, தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

நடிகை ரோகிணியைக் காதல் மணம் புரிந்து கொண்டார். கருத்து வேறுபாடுகளால் விவகாரத்துப் பெற்றுத் தனித்து வாழ்ந்தனர். ரகுவரனின் மரணச் செய்தியைக் கேட்ட ரோகிணி உடனடியாக ரகுவரன் வீட்டிற்கு விரைந்தார்.

ரகுவரனின் மரணம் தமிழ்த்திரைப்பட உலகுக்குப் பெரிய இழப்புதான்.

தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்

-

© TamilOnline.com