தமிழ் திரையிசை உலகில் 'சோனி நிறுவனம்’
பிரபல சோனி இசை நிறுவனம் முதல்முறையாகத் தமிழிசை உலகில் காலடி எடுத்து வைக்கிறது கமல்ஹாசனின் 'தசாவதாரம்' படத்தின் மூலமாக. பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் 'தசாவதாரம்' படத்தில் கமல்ஹாசன் பத்து வேடங்களில் நடித்திருக்கிறார்.

தசாவதாரம் ஏப்ரல் மாதம் உலகெங்கிலும் திரைக்கு வரவிருக்கிறது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகப் போகிறது. படத்தின் இசையை வெளியிடும் உரிமையை சோனி பிஎம்ஜி நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சோனி பிஎம்ஜி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர் சுப்பிரமணியம் கூறுகிறார்: 'தசாவதாரம்' படத்தின் பாடல்களும், அதன் இசையும் இந்திய இசையுலகில் நீண்ட காலத்துக்குப் பேசப்படும். உலகத் தரம் வாய்ந்த சோனி நிறுவனம் அடித்தட்டு மக்கள் வரை சோனி நிறுவனம் இந்த இசையைக் கொண்டு சேர்க்கும்.

தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்

-

© TamilOnline.com