பரத் நடிக்கும் சேவல்
ஜின்னா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் புதிய படம் சேவல். வேல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹரி இயக்க இருக்கும் இப்படத்தில், பரத் கதாநாயகன். வணிகப் படங்களில் முத்திரை படைக்கும் ஹரியும், தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்தாத நாயகன் பரத்தும் இப்படத்தில் இணைவதால், விநியோகஸ்தர்களிடையே இப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 'சிட்டிசன்' அஜித் போல, இந்தப் படத்தில் பரத் மூன்று தோற்றங்களில் வந்து எதிரிகளைப் பழிவாங்குகிறாராம்.

மிக முக்கியமான வேடத்தில் சிம்ரனும் நடிக்க இருக்கிறார். ஆனால் சிம்ரனுக்கும், பரத்துக்கும் என்ன உறவு என்பதுதான் படத்தின் ஹைலைட். சிம்ரனுக்கு மாறுபட்ட கதாபாத்திரமாம். சேவல் விரைவில் கூவும்.

தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com