ஹிந்தியில் 'அந்நியன்'
விக்ரம், சதா நடிப்பில் வெளிவந்து வெற்றி நடைப்போட்ட 'அந்நியன்' திரைப்படம் தற்போது ஹிந்தியில் 'அபரி ஜித்' என்ற பெயரில் வெளியாகிறது.

ஏற்கெனவே தமிழில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் ஹிந்தியிலும் வெற்றிகரமாக ஓடும் என்கிற எதிர்பார்ப்பில் விக்ரம் இருக்கிறார்.

விக்ரம் நடிப்பில் வெளிவரும் முதல் ஹிந்தி படமான ''அபரி ஜித்தின்' வெற்றியை பொறுத்தே ஹிந்தி திரைப்பட உலகில் விக்ரமின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியும் சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே சங்கர் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த இந்தியன், முதல்வன் படங்கள் ஹிந்திக்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com