மகேஷ், சந்தியா மற்றும் பலர்
லிங்குசாமியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பி.வி. ரவி, இயக்குநர் பி.வாசுவின் மகனான ஷக்தியையும், சந்தியாவையும் வைத்துப் புதிய படம் ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கிறார். படத்தின் பெயர் 'மகேஷ், சந்தியா மற்றும் பலர்'. வழக்கமான காதல் கதைதான் என்றாலும் அதை வித்தியாசமாகச் சொல்லி இருக்கிறோம் என்று கூறும் இயக்குநர், படத்தில் இளமை இருக்கும். கிளாமர் இருக்காது. அழகு இருக்கும். கவர்ச்சி இருக்காது என்று கூறுகிறார். இசை வித்யாசாகர். அதுசரி, ஆபாசம்தான் கூடாதுன்னாங்க, கவர்ச்சியில் என்ன தப்பு?

கேடிஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com