சண்டக்கோழி விஷால் நடிக்கும் புதிய படம்
செல்லமே, சண்டைக்கோழி நாயகன் விஷால் நடிப்பில் 'சிவப்பதிகாரம்' என்ற புதிய படத்தை ஸ்கிரீன்பிளே எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் எம்.ஆர். மோகன் ராதா, பி.எஸ். ராதாகிருஷ்ணன் இருவரும் இணைந்து தயாரிக்கவிருக்கின்றனர்.

செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான இளம் கதநாயகன் விஷால் நடிப்பில் வெளிவந்த 'சண்டைக்கோழி' வெற்றிப் பெற்றதையடுத்து அவருக்கு புதிய படங்களை நடிப்பதற்காக வாய்ப்புகள் வந்துக்கொண்டிருக்கின்றன.

சிவப்பதிகாரத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மம்தா நடிக்கவிருக்கிறார். இவர்களைத் தவிர முக்கிய கதாபாத்திரத்தில் நடிககிறார் ரகுவரன்.

வித்யாசாகர் இசையமைப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை கவனிக்கவிருக்கிறார் கரு.பழனியப்பன்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com