எங்கேடா அந்த பக்கோடா!
கடலைமாவும் வெங்காயமும் எண்ணெயில் வேகும்போது வரும் வாசனையே நாவில் எச்சில் ஊறச் செய்துவிடும். அதிலும், சூடாக மொறுமொறு பக்கோடாவை வாயில் போட்டாலோ.... அடடா,

தேவாமிருதம்தான் போங்கள். ஆனால், இங்கே கொடுத்திருக்கும் பக்கோடாக்கள் வித்தியாசமானவை. செய்துதான் பாருங்களேன்!

மூலிகை (herbal) பக்கோடா!

தேவையான பொருட்கள்

கொத்துமல்லி, கறிவேப்பிலை, புதினா, ரோஸ்மேரி, தைம், பார்ஸ்லி, பேசில் போன்றவற்றைத் தனியாகவோ, கலந்தோ சுத்தம் செய்து கழுவிப் பொடியாக நறுக்கியது - 1 கிண்ணம்
கடலைமாவு - 1/2 கிண்ணம்
கரம் மசாலா பவுடர் அல்லது லவங்க (cinnamon) தூள் - 1/2 தேக்கரண்டி
அரிசிமாவு - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய்ப் பொடி - 1 தேக்கரண்டி
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:

எண்ணெய் நீங்கலாக அனைத்துப் பொருட்களையும் தண்ணீர் விட்டுப் பிசிறி, சூடேறிய எண்ணெயில் போட்டுப் பொன்னிற மாக பொரித்து எடுக்கவும். இதில் இலைகள் இருப்பதால் வேகும்போது

சிலசமயம் படபட என மெதுவாக சப்தம் வரலாம்.

சரஸ்வதி தியாகராஜன், டேடன், ஒஹையோ

© TamilOnline.com