சத்யராஜ் நடிக்கவிருக்கும் புதிய படம்
இளம் கதாநாயகர்கள் நடுவில் தனக்கென ஓர் பாணியை, அமைத்துக் கொண்டு வியாபார ரீதியாக வெற்றி படங்களை தந்து வருகிறார் சத்யராஜ் . வருடத்திற்கு குறைந்தது நான்கு படங்களிலாவது நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ராஜ்கபூர், ஜெய் மாதாஜி சினி கம்பைன்ஸ் சார்பில் ஏ.வெங்கடேஷ் 'வம்பு சண்ட' என்ற பெயரில் புதிய படம் ஒன்றை சத்யராஜை வைத்து தயாரிக்கவிருக்கிறார்.

சத்யராஜ் கதாநாயகனாக நடிக்க வளர்ந்து வரும் 'வம்பு சண்ட' படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடிக்கிறார் உதய்கிரண். இவர்களுக்கு நாயகியாக நடிக்க புதுமுக நடிகைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை தவிர வடிவேல், 'கானா' உலகநாதன், மனோபாலா போன்றோரும் நடிக்கின்றனர்.

படத்திற்கான இசையை அமைக்கிறார் இமான். படத்திற்கான கதையை செல்வபாரதி எழுத, திரைக்கதை, வசனம், இயக்கம் போன்றவற்றை கவனிக்கிறார் ராஜ்கபூர்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com