கரண் நடிப்பில் 'கொக்கி'
இதுவரை வில்லனாக அதிக படங்களில் நடித்து வந்த கரண் கதாநாயகனாக நடிக்க 'கொக்கி' என்ற புதிய படம் ஒன்று தயாராகிவருகிறது.

'கொக்கி' என்கிற தனிமனிதனைப் பற்றிய கதை இது. கிராமத்து கொக்கி என்கிற கொக்கிசாமி சென்னைக்கு வேலை தேடி வர, சென்னையில் அவனுக்கு ஏற்படும் பல்வேறு அனுபவங்களே 'கொக்கி' கதையாகும்.

வங்காள நடிகை சஞ்சனா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். இவர் சிறந்த நடிகைக்கான வங்காள அரசின் விருதினை பெற்றவர்.

கிங் படத்தை இயக்கிய பிரபுசால இப்படத்தை இயக்குகிறார். முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார் கோட்டா சீனிவாசராவ்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com