பொங்கல் வெளியீடுகள்
பீமா

ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளிவந்திருக்கிறது 'பீமா'. இசை ஹாரிஸ் ஜெயராஜ். என். லிங்குசாமி படத்தை இயக்கியிருக்கிறார். பிரம்மாண்ட தயாரிப்பான இப்படத்தில் ஒரே ஒரு நடனகாட்சியில் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க வருகிறார் ஷெரின்.

காளை

சிலம்பரசன் நடிப்பில் வெளிவந்தது 'காளை'. நாயகி, வேதிகா. இசையை ஜி.வி. பிரகாஷ்குமார் அமைத்திருக்கிறார். படத்தை இயக்குகிறார் தருண்கோபி. இது ஒரு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம்.

வாழ்த்துக்கள்

மாதவன் நடித்து வெளிவந்திருக்கிறது 'வாழ்த்துக்கள்'. ஜோடி சேர்ந்திருக்கிறார் பாவனா. படத்தின் இயக்கம் சீமான். இசையை யுவன்சங்கர் ராஜா கவனித்திருக்கிறார். இளைஞன் ஒருவன் அன்றாட வாழ்வில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பே 'வாழ்த்துக்கள்'.

பழநி

பரத் நாயகனாகவும், காஜல் அகர்வால் நாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில் குஷ்பு முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக் கிறார். ஆம், பரத்தின் அக்காவாக குஷ்பு வருகிறார். சக்தி சிதம்பரம் தயாரித்து அளிக்கும் இப்படத்தை இயக்கியிருக்கிறார் பேரரசு. நகைசுவை காட்சியில் மின்ன வருகிறார் எம்.எஸ். பாஸ்கர்.

பிடிச்சிருக்கு

புதுமுகங்கள் அசோக் மற்றும் விசாகா இணைந்து நடிக்கும் இப்படத்தை பிரபல இயக்குநர் லிங்குசாமியின் உதவியாளரான கனகு இயக்கியிருக்கிறார். வழக்கம்போல் காதல் கதைதான் என்றாலும் சற்று வித்தியாசமாக அந்தக் காதலைச் சொல்கிறது 'பிடிச்சிருக்கு'.

பிரிவோம்...சந்திப்போம்...

இதில் சேரனுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் சிநேகா. கூட்டுக் குடும்பம், அதன் பின்னணியில் நடைபெறும் சுவையான காட்சிகள் என்று கதை சொல்ல வருகிறது 'பிரிவோம்.. சந்திப்போம்..'. வித்யாசாகர் இசை. படத்தை இயக்கியிருக்கிறார் கரு. பழனியப்பன்.

கேடிஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com