வாலன்டைன் ப்ரெளனி
தேவையான பொருட்கள்

உருக்கிய வெண்ணெய் - 1/2 கிண்ணம்
வனிலா எஸன்ஸ் - 1 தேக்கரண்டி
கோகோத் தூள் - 1/4 கிண்ணம்
முட்டை - 2
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
மைதாமாவு - 1 கிண்ணம்

செய்முறை

வெண்ணையைச் சர்க்கரையுடன் குழைத்து இதில் ஏனைய அனைத்துப் பொருட் களையும் சேர்த்துக் கலந்து ஒரு பேக்கிங் பானில் (Baking Pan) சமமாகப் பரப்பவும். 350 டிகிரி ஃபாரன்ஹீட்டிற்குச் சூடு செய்யப்பட்ட அவனில் இதை வைத்து பேக் செய்யவும். எடுத்து, ஆறிய பின்னர் இருதய வடிவிலான குக்கீ கட்டரை வைத்து அழுத்தி வில்லைகளாக்கி, அதன்மீது பொடித்த சர்க்கரையைத் தூவிச் சாப்பிடலாம்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com