வாலன்டைன் ராஸ்ப்பெரி பழ ஜெல்லி
தேவையான பொருட்கள்

ராஸ்ப்பெரி பழம் - 1/4 கிண்ணம்
வாசனையற்ற ஜெலட்டின் - 2 பாக்கெட்
அடர்ந்த (concentrate) ஆப்பிள் ஜூஸ் - 1 கிண்ணம்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு மிதமான தீயில் வைத்து, நன்கு கொதிக்கும் போது ஜெலட்டின் சேர்த்து, நன்கு கரைந்ததும் இறக்கவும். ராஸ்ப்பெரி பழத்தை பிளெண்டரில் நன்கு அரைக்கவும். இதை ஜெலட்டின் கரைந்த கலவையுடன் சேர்க்கவும். ஆப்பிள் ஜூஸையும் சேர்த்துக் கலந்து இருதய வடிவிலான ஜெல்லி mould-ல் விடவும். பின்னர் இதைக் குளிர் சாதனப் பெட்டியில் நன்றாக உறையும்வரை வைத்து, ஒரு தட்டிற்கு மாற்றவும்.

இதை ஃப்ரீஸரில் வைக்கக் கூடாது. இருதய வடிவ ஜெல்லி mould இல்லை யெனில் ஒரு அகலமான தட்டில் விட்டு வைத்து உறைந்ததும் அதை மற்றொரு தட்டில் கவிழ்த்து பெரிய ஹார்ட் வடிவிலான குக்கீ கட்டரால் வெட்டவும்.

பின்குறிப்பு

ஜெலட்டின் அசைவப் பொருள். இதற்கு இணையான சைவப் பொருளான (vegetarian) agar-agar ஐ உபயோகித்தும் செய்யலாம். பதப்படுத்தப்பட்ட ராஸ்ப்பெரி பழங்களையும் பயன்படுத்தலாம். இதே முறையில் பதப்படுத்தப்பட்ட ஸ்ட்ராபெரி, செர்ரி பழங்களை வைத்தும் செய்யலாம்

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com