வாலன்டைன் மில்க்க்ஷேக்
தேவையான பொருட்கள்

ஸ்ட்ராபெரி அல்லது ராஸ்ப்பெரி பழங்கள் - 15
பால் - 2 கிண்ணம்
சர்க்கரை - தேவையான அளவு
ஸ்ட்ராபெரி ஐஸ்க்ரீம் - 2 மேசைக்கரண்டி
ஸ்ட்ராபெரி எஸன்ஸ் (தேவையானல்) - 1/4 தேக்கரண்டி

செய்முறை

முதலில் ஸ்ட்ராபெரி பழங்களைச் சிறிது பாலுடன் சேர்த்து பிளெண்டரில் நன்கு அடிக்கவும். பின்னர் மீதிப் பாலையும், ஸ்ட்ராபெரி ஐஸ்க்ரீம் தவிர மற்றப் பொருட்களையும் பிளெண்டரில் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் இதைக் கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலாக ஸ்ட்ராபெரி ஐஸ்க்ரீம் சேர்த்துப் பருகவும்.

இதற்கு பதப்படுத்திய (உறையவைத்த) பழங்களும் உபயோகிக்கலாம்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com