அரிசோனா தமிழ்ச் சங்கம் பொங்கல் திருவிழா 2008
ஜனவரி 12, 2008 அன்று தைப்பொங்கல் திருவிழாவை சவுத் மவுண்டன் பூங்காவில் அரிசோனா தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. முழுநாள் நடக்கவிருக்கும் இத்திருவிழாவில் ஆண்கள்,

பெண்கள், குழந்தைகள் என அனைத்துப் பிரிவினருக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

ஆண்களுக்கு கிரிக்கெட், கபடி பெண்களுக்கு கொக்கோ, கோலப்போட்டி, சிறுவர்களுக்கு பானை உரி அடித்தல், ஓட்டப்பந்தயம், பேச்சுப்போட்டி, மாறுவேடப் போட்டி, ஓவியப்போட்டி, குடும்பத்துடன்

பங்கு பெற மெளன குரல், 'தமிழில் ஓர் நிமிடம்' - வார்த்தை விளையாட்டு, பட்டிமன்றம் இன்னும் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் உள்ளன.

தைப்பொங்கல் திருவிழாவின் சிறப்பு அம்சமாக விளங்கப் போவது கரும்பு நட்டு, மஞ்சள் கிழங்குடன் அலங்கரிக்கப்பட்ட பொங்கல் பானையில் அனைவரும் ஒன்று சேர்ந்து 'பொங்கலோ பொங்கல்!'

எனக் கூவி மகிழ்ந்து பொங்கல் சமைத்துப் பகிர்ந்து உண்ணவிருப்பது. இதில் நானூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனிதா கோட்டி

© TamilOnline.com