புகைபிடிப்பது போல் நடிக்க மாட்டேன்
தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்

எத்தனையோ விருதுகள் வந்தாலும், அவற்றால் கர்வம் ஏற்பட்டது இல்லை.

டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா

*****

தமிழக அரசின் இலவச கலர் டிவி திட்டம் விவசாயத்துக்குக் கூலித் தொழிலாளர்கள் கிடைப்பதைக் குறைத்துள்ளது. கிலோ அரிசி 2 ரூபாய்த் திட்டம் விவசாயக் கூலிகளின் குடிப்பழக்கத்தை ஊக்குவித்துள்ளது.

ஆற்காடு வீராசாமி, தமிழக மின்துறை அமைச்சர்

*****

இனி நான் நடிக்கும் படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம் பெறாமல் பார்த்துக் கொள்வேன். நானும் புகை பிடிப்பது போல் நடிக்க மாட்டேன்.

விஜய்

*****

குஜராத்தில் பி.ஜே.பி. வெற்றி பெற்றதனால், இந்தியாவில் இடைத்தேர்தல் வருவது தற்போதைக்குத் தவிர்க்கப்படும்.

எல்.கே. அத்வானி

*****


தமிழையும், சமயத்தையும் பிரிக்க முடியாது. ஆழ்வார்கள் வைணவத்தை மட்டுமே பரப்பவில்லை. சமய பேதத்தை மறுத்துப் பாடியுள்ளனர். இதை மக்களிடையே எடுத்துச் சொல்ல நாம் மறந்துவிட்டோம்.

ஆர்.எம். வீரப்பன்

*****

முதல்வராக வேண்டும் என்பதற்காக சிலர் கட்சி ஆரம்பிக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலின்

*****

முதல்வர் பதவி என்று நாங்கள் உச்சரித்தாலே உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது? அது என்ன உங்கள் பரம்பரைச் சொத்தா?

சரத்குமார்

*****

ஜன நடமாட்டம் இல்லாத ஒரு தீவில் தன்னந்தனியாக எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் நான் இருக்கத் தயார். கண்ணதாசனின் கவிதை நூலும் வெற்றிலைச் செல்லமும் சுதா ரகுநாதனின் இசைப் பேழையும் கையில் இருந்தால்.

சுப்புடு

*****

தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com