கணிதப்புதிர்கள்
1. 1729 இந்த எண்ணுக்கு ஒரு சிறப்பு உள்ளது. அது என்னவென்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்களேன்!

2. 1 முதல் 9 வரையுள்ள எண்களை 1, 2, 3 என்று வரிசையில் கூட்டியோ, கழித்தோ, வகுத்தோ, பெருக்கியோ கூட்டுத் தொகை 100 வருமாறு செய்ய வேண்டும். முயன்று பாருங்களேன்.

3. 153 = (1x1x1) + (5x5x5) + (3x3x3) இது போன்று வேறு எண்களை உங்களால் கண்டறிய முடியுமா?

4. 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21... என்ற வரிசையில் அடுத்து வரும் என்னவாக இருக்கும்?

5. முப்பதடி ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்து விட்ட தவளை, ஒவ்வொரு மணிநேரத்துக்கும் 3 அடி உயரம் ஏறுகிறது, உடனே 2 அடி கீழே சறுக்கு கிறது. அப்படியென்றால் அக்கிணற்றி லிருந்து அது எத்தனை மணி நேரத்தில் வெளியே வரும்?

கணிதப்புதிர்கள் விடைகள்

அரவிந்தன்

© TamilOnline.com