சேமியா பொங்கல்
தேவையான பொருட்கள்

சேமியா - 2 கிண்ணம்
பாசிப்பருப்பு - 1/2 கிண்ணம்
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1/4 தேக்கரண்டி
பச்சைமிளகாய் (பொடியாக நறுக்கியது) - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை -
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/8 தேக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி
முந்திரிப் பருப்பு - சிறிதளவு

செய்முறை

முதலில் பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும். சிறிது நெய் விட்டு சேமியாவை வறுத்துக் கொள்ளவும். 2 கிண்ணம் தண்ணீரைக் கொதிக்கவிட்டு இதில் சேமியாவைப் போட்டு வேகவைத்துத் தண்ணீரை வடிய வைத்துக் கொள்ளவும். அடிகனமான வாணலியில் நெய் விட்டு இதில் இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலையைப் பொரித்து அதில் சீரகம், மிளகுப்பொடி போடவும். அதில் வெந்த பருப்பைப் போட்டு தேவையான அளவு உப்புச் சேர்த்து மிதமான தீயில் வைக்கவும். நன்கு கொதி வந்ததும் வெந்த சேமியாவைச் சேர்த்து கிளறவும். பின்னர் நெய்யையும் விட்டு நன்றாகக் கிளறி இறக்கி வறுத்த முந்திரிப் பருப்புத் துண்டங்களைச் சேர்க்கவும்.

சரஸ்வதி தியாகராஜன், டேடன், ஒஹையோ

© TamilOnline.com