நோவையில் (மிச்சிகன்) வெங்கடேஸ்வரர் ஆலயம்
மிச்சிகனில் உள்ள நோவை நகரத்தில் 4 மில்லியன் டாலர் செலவில் ஒரு வெங்கடேஸ்வரர் ஆலயமும் கலாசார மையமும் கட்டப்பட இருக்கின்றன. இதற்காக 10.11 ஏக்கர் நிலத்தை டெட்ராயிட் தெலுங்கு சங்கம் வாங்கிக் கொடுத்துள்ளது. திருமலையி லிருந்து கொண்டுவரப்பட்ட கல் ஒன்றைப் பதித்து பூமிபூஜை 2006 நவம்பர் மாதத்தில் நடத்தப்பட்டது. ·பார்மிங்டன் ஹில்ஸில் அண்மையில் நடத்தப்பட்ட இதற்கான நிதி திரட்டும் விழாவில் 1.5 மில்லியன் டாலர் வரை பணமாகவும், உறுதிமொழிகளாகவும் பெறப்பட்டுள்ளது.

கோவிலில் ஸ்ரீ வெங்கடேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி, விநாயகர், அனுமான், கருடாழ்வார் ஆகியோர் பிரதிஷ்டை செய்யப்படுவர். பல நிலைகளிலும் இத்திருப்பணியில் பங்கு கொள்ள வாய்ப்புகள் உள்ளன.

அதிக விவரங்களுக்குப் பார்க்கவும்: http://www.svtemplemi.org

அரவிந்த் கே ரமேஷ்

© TamilOnline.com