செட்டிநாட்டுப் பாரம்பரியம்
நகரத்தார்கள் கோட்டை போல் வீடுகளைக் கட்டி வாழ்ந்த செட்டிநாடு, கோட்டையூர், கானாடுகாத்தான் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய நகரம் காரைக்குடி. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இப்பகுதியை நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பதினைந்து சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக மத்திய சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. மத்திய அரசு வருவாயைப் பெருக்குவதற்கும், கலாசார வளர்ச்சிக்கும் பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகிறது. அதில் ஒன்றாக சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் தற்போது ஈடுபட்டுள்ளது. கிராமப்புற சுற்றுலாத் திட்டத்தின் மூலமாக பல்வேறு சிறப்புமிக்க பகுதிகளைக் கண்டறிந்து, அவற்றை நாட்டின் சிறந்த சுற்றுலாத் தலங்களாக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி கேரளாவில் கும்பலங்கி மற்றும் ஆரன்முலா பகுதிகளும், ஆந்திராவில் போச்சம்பள்ளி, கர்நாடகாவில் பனவாசி, தமிழகத்தில் காரைக்குடி ஆகிய பகுதிகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. சுற்றுலாத் துறையுடன் கைவினைத் தொழில், கைத்தறித் துறை ஆகியவற்றை இணைத்து கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்துதில் தற்போது சுற்றுலாத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அரவிந்த்

© TamilOnline.com