மீண்டும் ஜெமினி
சந்திரலேகா, ஔவையார் போன்ற பல்வேறு வெற்றிப் படங்களை உருவாக்கி, ரசிகர்களை வியப்பிலும் திகைப்பிலும் ஆழ்த்திய நிறுவனம் எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி. நடுவில் பலகாலம் திரைப்படங்களைத் தயாரிக்காமல் விகடன் மீடியா சர்வீஸஸ் என்ற பெயரில் புத்தக வெளியீட்டிலும் சின்னத்திரை தொடர்களைத் தயாரிப்பதிலும் ஈடுபட்டு வந்த அது, மீண்டும் திரைப்படத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறது. 'சிவனின் மனதில் சந்தியா' என்ற பெயரில் ஜீவாவின் நடிப்பில் உருவாக இருக்கும் அப்படத்தை இயக்குவது எஸ்.ஏ. சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராஜேஷ். இசை யுவன் சங்கர் ராஜா. சக்தி சரவணன் ஒளிப்பதிவு. விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது.

தொகுப்பு:கேடிஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com