பொட்டுக்கடலைமாவு முறுக்கு
தேவையான பொருட்கள்

பொட்டுக்கடலை மாவு - 1/2 கிண்ணம்
கடலைமாவு - 1/2 கிண்ணம்
அரிசிமாவு - 3/4 கிண்ணம்
பச்சை மிளகாய் விழுது- 1/2 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 1/2 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
சமையல் எண்ணெய் - பொரிக்க

எல்லாப் பொருட்களையும் தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். முறுக்கு அச்சில் இந்த மாவை எலுமிச்சை அளவு போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழிந்து, இருபுறமும் பொன்னிறமாகப் பொரித்து எடுத்து வடியவைக்கவும்.

சரஸ்வதி தியாகராஜன், டேடன், ஒஹையோ

© TamilOnline.com