நொறுக்குத் தீனிகள்
தீபாவளிக்குக் கஷாயத்தைப் போட்டுக் கடுப்படித்து விட்டீர்களே என்று சிலர் அலுத்துக் கொண்டார்கள். அவர்களும் (ஏன், மற்றவர்களும்தான்!) மகிழ்ச்சியடைய இதோ சில புதுப்புது இனிப்பு, கார வகைகள்.

ஜவ்வரிசி முறுக்கு

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி - 1/2 கிண்ணம்
அரிசி மாவு - 3/4 கிண்ணம்
சற்றுப் புளித்த தயிர் - 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
பெருங்காயத் தூள் - 1/2 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
சமையல் எண்ணெய் - பொரிக்க

செய்முறை

ஜவ்வரிசியைத் தயிரில் 10 மணி நேரமாவது ஊறவைக்கவும். பின்னர் அரிசி மாவு தவிர மீதிப் பொருட்களுடன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுக்கவும். இதில் அரிசி மாவைக் கலந்து நன்கு பிசையவும். பின்னர் இந்த மாவை முறுக்கு அச்சில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழிந்து, இருபுறமும் பொன்னிறமாகப் பொரித்து எடுத்து வடியவைக்கவும்.

சரஸ்வதி தியாகராஜன், டேடன், ஒஹையோ

© TamilOnline.com