பாபி ஜிண்டால் லூயிசியானா ஆளுனராகத் தேர்வு
லூயிசியானா மாநிலத்தின் ஆளுனராக 36 வயதான இந்திய-அமெரிக்கரான பாபி ஜிண்டால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த வெற்றியின் மூலம், அமெரிக்க மாநிலம் எதையும் ஆளும் கவர்னர்களில் வயதில் குறைந்தவர், இந்தப் பதவியை வகிக்கும் முதல் அமெரிக்க-இந்தியர் என்கிற பெருமைகளை இவர் பெற்றிருக்கிறார். அதுமட்டுமல்ல. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட 11 வேட்பாளர்களும் சேர்ந்து பெற்ற வோட்டுகளை விட இவர் அதிகம் பெற்றார் என்பதும் ஒரு சாதனைதான்.

முந்தைய தேர்தலில் போட்டியிட்டு இவர் தோல்வியடைந்த போதும் மீண்டும் உழைத்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு இவர் ஓர் நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிவதில் ஆச்சரியம் இல்லை. தனது இந்தியப் பெயரான பீயுஷ் என்பதை மாற்றியமைத்துக் கொண்டது, சிறுபான்மையினரைப் பற்றிய அக்கறையின்மை என்று பல குற்றச்சாட்டுகளை இவர் மீது வைப்பவர்கள் உண்டு. ஆனாலும் இவரது சாதனை இவற்றால் மங்குவதில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

தகவல் தொகுப்பு: மதுரபாரதி

© TamilOnline.com